ஸ்ரீ முருகா ஜோதிட திருமணப் பொருத்தங்கள்

1) தினப்பொருத்தம் –  க்ஷேமமாக இருத்தல்

பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 2,4,6,8,9,11,13,15,18,20,22,24 ஆக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. பெண், ஆண் இரு நட்சத்திரம் ரோகினி, திருவாதிரை, பூசம், மகம், விசாகம், ஹஸ்தம், திருவேணம், உத்திரட்டாதி, ரேவதியாக வந்தால் உத்தமம். பெண், ஆண் ராசிக்கு 10 ராசியில் 88 பாதம் சேர்க்க கூடாது

2) கணப்பொருத்தம் -அன்யோன்யவசியம்

பெண் தேவ கணம் ஆண் தேவ கணம் உத்தமம் சரி
பெண் தேவகணம் ஆண் மனுச கணம் மத்திமம்
பெண் தேவகணம் ஆண் ராக்ஷஸ கணம் அதர்மம் தவறு
பெண் மனுச கணம்ஆண் மனுச கணம் உத்தமம் சரி
பெண் மனுச கணம்ஆண் தேவ கணம் மத்திமம்
பெண் மனுச கணம் ஆண் ராக்ஷஸ கணம் அதர்மம் தவறு
பெண் ராக்ஷஸ கணம் ஆண் ராக்ஷஸ கணம் உத்தமம் சரி
பெண் ராக்ஷஸ கணம் ஆண் மனுச கணம் மத்திமம்
பெண் ராக்ஷஸ கணம் ஆண் தேவ கணம் அதர்மம் தவறு

பெண் ராக்ஷஸ கணம்மாக இருந்து ஆண் தேவ, மனுச கணம் வந்தால் ஆண் நட்சத்திரம் 14 க்கு மேல் வந்தால் உத்தமம் சரி

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம்,  அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி

மனுஷ கணம்

பரணி,  ரோகிணி, திருவாதிரை,  பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி

ராட்சஸ கணம்

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்

3) யோனிப் பொருத்தம் – இல்லரசுகம் (பகை யோனி)

பூராடம், திருவோணம் நட்சத்திற்கு பூசம், கிருத்திகை பகை தவறு

அவிட்டம், பூரட்டாதி நட்சத்திற்கு பரணி, ரேவதி பகை தவறு

அஸ்வினி, சதயம் நட்சத்திற்கு சுவாதி, ஹஸ்தம் பகை தவறு

உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி நட்சத்திற்கு விசாகம், சித்திரை பகை தவறு

மகம், பூரம் நட்சத்திற்கு ஆயில்யம், புனர்பூசம் பகை தவறு

ரோகினி, மிருகசீர்ஷம் நட்சத்திற்கு மகம், பூரம் பகை தவறு

உத்திராடம் நட்சத்திற்கு ரோகினி, மிருகசீர்ஷம் பகை தவறு

கேட்டை, அனுசம் நட்சத்திற்கு மூலம், திருவாதிரை பகை தவறு ,

மேலும் பெண்ணுக்கு பெண் யோனியும், ஆண்ணுக்கு ஆண் போனியும் பகையானாலும் சேர்க்கலாம் உத்தமம் சரி

4) ராசிப்பொருத்தம் – வம்ச விருத்தி, மன ஒற்றுமை

பெண் ராசிக்கு ஆண் ராசி, 7.8.9.10.11.12 ஆக வந்தால் உத்தமம். கடகம், சிம்ம ராசிக்கு 7 ம் ராசி சேர்க்க கூடாது
மகரம், கும்பம் ராசிக்கு 7 ம் ராசி சேர்க்க கூடாது( அல்லது ) ராசி அதிபதி பொருத்தம் பெண், ஆண் ராசி அதிபதிகள் நட்பு ஆனாலும் சமம் ஆனாலும் உத்தமம்
பெண், ஆண் ராசி அதிபதிகள் பகை, நட்பு ஆனாலும் மத்திமம்.

5) பெண் இலக்னத்திற்கு ஆண் இலக்ணம் 6,8 ஆக வரக்கூடாது

6) ரஜ்ஜு பொருத்தம் – தீர்க்க சுமங்கலியாக இருத்தல்.

ரஜ்ஜு பொருத்தம் – தீர்க்க சுமங்கலியாக இருத்தல்.
செவ்வா நட்சத்திரத்திற்கு செவ்வா நட்சத்திரம் சேராது
சந்திரன், ராகு நட்சத்திரத்திற்கு சந்திரன், ராகு நட்சத்திரம் சேராது

சூரியன், குரு நட்சத்திரத்திற்கு சூரியன், குரு நட்சத்திரம் சேராது

சனி, சுக்கிரன் நட்சத்திரத்திற்கு சனி, சுக்கிரன் நட்சத்திரம் சேராது

கேது, புதன் நட்சத்திரத்திற்கு கேது, புதன் நட்சத்திரம் சேராது.

மேல் சொல்லப்பட்ட ஆறு பொருத்தத்தில் ஐந்து மிக அவசியம்.

7) செவ்வாய் தேஷம்

மற்ற கிரக சேர்க்கை, பார்வை இருந்தாலும்

A – இலக்னத்திற்கு 7, 8 ல் செவ்வாய் இருந்தால் தோஷம்

B – இலக்னத்திற்கு 2, 4, 12 ல் செவ்வாய் இருந்தால் தோஷம்

C – இலக்னத்திற்கு 1,3,5,6,9,10,11ல் செவ்வாய் இருந்தால் தேஷம் இல்லை

A + A உத்தமம் சரி
A + B மத்திமம்
A + C அதர்மம் தவறு
B + B உத்தமம் சரி
B + A மத்திமம்
B + C அதர்மம் தவறு
C + C உத்தமம் சரி
C + B மத்திமம்
C + A அதர்மம் தவறு

8) களத்திர தோஷம்

  1. 7 ல் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இருந்தால் 25% தோஷம்
  2. ஏழாம் பாவ அதிபதி 6,8,12 ல் இருந்தால் 25% தோஷம்
  3. ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் 6,8,12 ல் இருந்தால் 25% தோஷம்,
  4. 7ம் அதிபதிக்கு சாரம் கொடுத்தவர் நீசம் ஆககூடாது இருந்தால் 25% தோஷம், பெண்களுக்கு களத்திரகாரகன் செவ்வாய் 6,8,12 ல் இருந்தால் தோஷம். பெண்ணுக்கு மேல் சொன்ன நான்கு தோஷம் இருந்தால், ஆண்ணுக்கு இருக்ககூடாது, ஆண்ணுக்கு மேல் சொன்ன நான்கு தோஷம் இருந்தால் பெண்ணுக்கு இருக்ககூடாது

9) ஆயுள் தோஷம் (அ) மாங்கள்ய தோஷம்

8 ல் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இருந்தால் தோஷம் பரிகாரம் 8 ம் பாவ அதிபதி 3,7,11,ல் இருந்தால் தோஷ நிவர்த்தி (அ) ஆயுள்காரகர் சனி 3,6,10,11 ல் இருந்தால் தோஷ நிவர்த்தி பெண்ணுக்கு தோஷம் இருந்தால், ஆண்ணுக்கு 8 ம் பாவ அதிபதி 3,7,11,ல் இருக்க வேண்டும், ஆண்ணுக்கு தோஷம் இருந்தால் பெண்ணுக்கு 8 ம் பாவ அதிபதி 3,7,11,ல் இருக்க வேண்டும்

10) புத்திர தோஷம்

  1. 5 ல் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இருந்தால் 25% தோஷம்
  2. 5 ம் பாவ அதிபதி 6,8,12ல் இருந்தால் 25% தோஷம்
  3. புத்திரகாரகர் குரு 4,8,12 இருந்தால் 25% தோஷம்
  4. 5 ம் அதிபதிக்கு சாரம் கொடுத்தவர் நீசம் ஆக கூடாது இருந்தால் 25% தோஷம்
  5. பெண்ணுக்கு 4 தோஷம் இருந்தால், ஆண்ணுக்கு இருக்ககூடாது.
  6. ஆண்ணுக்கு 4 தோஷம் இருந்தால் பெண்ணுக்கு இருக்ககூடாது.

11) காலசர்ப தோஷம்

இலக்னம் முதல் மற்ற கிரகங்கள் கேது இராகுவிற்குள் இருந்தால் இதற்கு காலசர்ப தோஷம் ஆகும். ஒரு கிரகம் (அ) இலக்னம் வெளியே இருந்தால் தோஷமில்லை. பெண்ணுக்கு தோஷம் இருந்தால், ஆண்ணுக்கு இருக்ககூடாது. ஆண்ணுக்கு தோஷம் இருந்தால் பெண்ணுக்கு இருக்ககூடாது.

12) திசா புத்தி

பெண், ஆண் இருவருக்கும் 6,8,12,ல் இருந்து தசை நடத்தக்கூடாது.

திருமணத்திற்கு இந்த பொருத்தங்கள் மிக அவசியம்

ஜாதகம் இல்லாதவர்களுக்கு

பழைய ஓலை சுவடியில் திருமண பொருத்தம்.
(இது பழைய “ஓழை சுவடியில்” கண்ட குறிப்பு) “ஆக்கினா பொருத்தம் ” என்பது ஒருவருக்கு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்கும் முறை ஆகும். இது மிகவும் துல்லியமான முறையாகும். இம்முறைப்படி, மனிதர்களை அவர்களின் புருவ அமைப்பை கொண்டு நான்குவகையாக பிரிக்கப்படுகிறார்கள்

  1. இணைந்த புருவ ஆண்கள் 65%பேர்
  2. தனிப்புருவ ஆண்கள் 35%பேர்
  3. இணைந்த புருவ பெண்கள் 35%பேர்
  4. தனிப்புருவ பெண்கள் 65%பேர்

இணைந்த புருவ ஆணுக்கு, தனிப்புருவ பெண்ணையும் , தனிப்புருவ ஆணுக்கு, இணைந்த புருவ பெண்ணையும் திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள் அப்படியில்லாமல் கணவன் மனைவி இருவரும் இணைந்த புருவம் உள்ளவர்களாகவோ, அல்லது கணவன் மனைவி இருவரும் ” தனிப்புருவம் உள்ளவர்களாகவோ, ஜோடி சேர்ந்திருந்தால் அவர்கள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள் இதை முதலில் நான் நம்பவில்லை, சிரிப்பு தான் வந்தது. ஆனால் பல நூறு சிக்கல்கள் நிறைந்த தம்பதிகளிலும் ,ஜாதகத்தில் பொருத்தம் இருந்தும் Diverse ஆன பல தம்பதிகளிலும் ஆராய்ந்தபோது 100%உண்மை என்றே தெரிகிறது.