மேஷராசி
மேஷ ராசி அல்லது மேஷ இலக்னத்தில் பிறந்த அன்பர்களே தற்பொழுது ராசிக்கு பத்தாம் இடத்தில் வருகின்ற சனிபகவானால் பதவியில் உள்ள அன்பர்களுக்கு இடமாற்றம், உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லாமல் இருப்பது, வீண் அலைச்சல், மன அச்சம், இவைகளால் பாதிப்பு, தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் அமரப்போவதால் நீங்க உங்க வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
சனி தசை அல்லது சனி புத்தி நடக்கும் அன்பர்களுக்கு சிலருக்கு கர்மகாரியங்களில் கலந்து கொள்வார் அல்லது வீட்டில் ஒரு கர்மகாரியம் நடக்கும். சிலர் புதியதாக தொழில் ஆரம்பித்தல், இருதய பிரச்னை, புத்தி தெளிவற்ற நிலை, இலாபமில்லாமல், ஆதாயம் குறைவாக வேலைகளை செய்தல் போன்றவைகள் ஏற்படலாம்.
தாயாரின் உடல்நலம் பாதிக்கும், வாகனத்திற்கும், வீடுகளுக்கும் செலவுகள் ஏற்படும், படிக்கும் மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை அல்லது இடமாற்றத்துடன் கல்வி படிக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு காலில் காயம், மாவுகட்டு போடும் நிலை ஏற்படும், நிம்மதியற்ற தூக்கம், சிலருக்கு மனைவியின் பெயரில் மண், மனை, பூமி வீடு வாங்குதல் போன்றலை கிட்டும்.
சிலருக்கு தொழிலுக்காக வழக்கு சந்திக்கும் நிலை ஏற்படும். சில அன்பர்கனின் தந்தைக்கு பல், கண்ணுக்கு வைத்தியம் பார்க்கும் நிலை அல்லது கண்ணுக்கு ஆப்ரேஷன் செய்யும் நிலை ஏற்படும். தந்தைக்கு விபத்து நடக்கும் காலமாக இருப்பதால் வாகனத்தில் செல்லும் பொழுது கவணம் தேவை. இளைய சகோதரனுக்கு வழக்கு, கடன்கள் ஏற்படும். மொத்தத்தில் இவர்களுக்கு 70 % சிறப்பாக இருக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட கலர்: வெள்ளை
பரிகாரம்
ஏழைகளுக்கு குடை வாங்கி கொடுக்க வேண்டும். திருப்பரங் குன்றத்தில் உள்ள சனிபகாவானுக்கு 7 நல்லெண்ணை தீபம் ஏற்றவும்