மிதுனராசி

மிதுன ராசி அல்லது மிதுன இலக்னத்தில் பிறந்த அன்பர்களே உங்களுக்கு கண்டச்சனி முடிந்த அஷ்டமத்து சனி ஆரம்பமாகப் போகிறது. உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் வருகின்ற சனியை அஷ்டம சனி எனப்படும் இந்த இரண்டரை ஆண்டுகாலம் சோதனைகள் வந்தாலும் உங்களுக்கு படிப்பினைகளை கொடுத்து அடுத்து வரப்போகிற பாக்ய சனியால் நன்மைகள் நடக்கப் போகிறது சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும்.

இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும் சிலருக்கு மிதுன ராசிக்கு வயிற்று நோய், பண நொடிப்பு, எடுத்த செயல்களில் / வேலைகளில் தோல்வி, கால்நடைகள் அழிவு, நண்பர்களுக்கு கஷ்டம், அரசாங்கத்தால் தொல்லை, சிறை தண்டனை, மான பங்கம், பல வகை தடங்கல்கள், வீண் செலவுகள், அபராதம் செலுத்துதல், கண் நோய், வறுமை, கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம், போன்ற பாதிப்பு அடைய வாய்ப்பு உண்டு. சிலருக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவு, பல், கண்ணுக்கு வைத்தியம் பார்க்கும் நிலை அல்லது கண்ணுக்கு ஆப்ரேஷன் செய்யும் நிலை ஏற்படும்.

குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கரை அதிகம் காட்டும் நிலை ஏற்படும். சில அன்பர்கனின் பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும், அல்சரினால் பாதிப்பு ஏற்படும், தந்தைக்கு காலில் காயம், அல்லது மாவுகட்டு போடும் நிலை ஏற்படும், காலில் கவனம் தேவை. பேர், புகழ், அந்தஸ்து, கௌரவம் இவைகளில் பாதிப்பு ஏற்படும், தாயாருக்கு கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும், சிலரின் தாய்க்கு வழக்குகள் இருந்தால் அதில் வெற்றி உண்டாகும்.

திருமணம் சற்று தாமதம் ஏற்படும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்காமல், நிதானமாக யோசித்து செயல்பட்டால் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். போராட்டங்களை கடந்த பின்பு ஒரு சுப காரியங்கள் நடைப் பெறும். கணவன், மனைவிக்கு இடையே அனாவசிய பேச்சு தவிர்ப்பது மிக  அவசியம்.

அதிஷ்ட எண்: 6

அதிஷ்ட கலர்: வெண்பட்டு

பரிகாரம்

சனிக்கிழமை அன்று விரதம் இருந்து ஆஞ்நேயருக்கு 19 நல்லெண்ணை தீபம் ஏற்றவும்