ரிஷபராசி

ரிஷப ராசி அல்லது  ரிஷப இலக்னத்தில் பிறந்த அன்பர்களே உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் வருகின்ற சனிபகவானால் உங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். பணவரவு அபரிமிதமாக இருக்கும்.

நேர்மையாக இருப்பீர்கள். ஆலய தரிசனம் அற்புதமான பலன்களை தரும். வீண் விரையம், மனநிலை பாதிப்பு, நோய்கள், விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம், நல்ல வாய்ப்புகள் கை நழுவுதல் போன்ற சுபம், அசுப பலன்கள் இரண்டும் கலந்து இருக்கும் நிலை ஏற்படும்.

ஒருசிலருக்கு குல தெய்வ அருளினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு புரமோசனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். தொழிலில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. மூத்த சகோதரர் உடன் சண்டை, இலாபத்தில் இடர்பாடுகள் ஏற்படும்.

இளைய சகோதரனுக்கு கை, கால்களில் அடிபடுதல், அல்லது தலைப்பகுதியில் அடிபடுதல் ஏற்படும். சகோதருடன் சுமுக நிலை  ஏற்படும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடக்கும் வெற்றிகள் தேடி வரும்.

சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கும், மீடியா துறையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் குவியும். தாய்க்கு கால் வலி, முதுகு தண்டுவடம் இவற்றில் பாதிப்ப ஏற்படும். தந்தைக்கு நண்பர்களினால் நிம்மதி இழக்கும் நிலை அல்லது கண்டம் ஏற்படும். இந்த ராசி அல்லது இலக்னகாரருக்கு ஆப்ரேஷன் செய்யும் நிலை ஏற்படும். தொழில் சிறப்பாக இருக்கும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், அரசு வேலைக்கு முயற்சி செய்து வரும் அன்பர்களுக்கு வேலை கிடைக்கும். இவர்களுக்கு 60 % சிறப்பாக இருக்கும்.

அதிஷ்ட எண்: 5

அதிஷ்ட கலர்: பச்சை

பரிகாரம்

மூத்த வயதுடைய ஏழை மக்களுக்கு செருப்பு வாங்கி கொடுக்கவும் திருநள்ளார் சென்று வரவும்.