திருமண பொருத்தம் – Thirumana Porutham

1.நட்சத்திரப் பொருத்தம்:

இதனை தினப்பொருத்தம் என்று சொல்வார்கள்  இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பார்க்கக் கூடியது.

2.கணப் பொருத்தம்:

இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதி சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள்.தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.

3.மகேந்திரப் பொருத்தம்:

இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.

4.ஸ்திரீதீர்க்கப் பொருத்தம்:

இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.

5.யோனிப் பொருத்தம்:

இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

6.இராசிப் பொருத்தம்:

இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.

7.இராசியாதிபதிப் பொருத்தம்:

இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

8.வசியப் பொருத்தம்:

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.

9.இரச்சுப் பொருத்தம்:

கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.

10.வேதைப் பொருத்தம்:

தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

திருமண நட்சத்திர பொருத்தம் – ஆண்களுக்கு

வ.எண் ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1 அஸ்வனி
பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2 பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3 கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4 கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5 ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6 மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8 திருவாதிரை பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10
புனர்பூசம் 4 ம் பாதம்
பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11 பூசம் உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12 ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்
13 மகம் சித்திரை, அவிட்டம் 3, 4
14 பூரம் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15 உத்திரம் 1 ம் பாதம் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16 உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் பூராடம், திருவோணம், ரேவதி
17 அஸ்தம் உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18 சித்திரை 1, 2 ம் பாதங்கள் விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20 சுவாதி அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21 விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் சதயம், ஆயில்யம்
22 விசாகம் 4 ம் பாதம் சதயம்
23 அனுஷம் உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24 கேட்டை திருவோணம், அனுஷம்
25 மூலம் அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26 பூராடம் உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27 உத்திராடம் 1 ம் பாதம் பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28 உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2
29 திருவோணம் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30 அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31 அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32 சதயம் கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34 பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35 உத்திரட்டாதி ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36 ரேவதி பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம் – பெண்களுக்கு

வ.எண் பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1 அஸ்வனி பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2 பரணி புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3 கார்த்திகை 1 ம் பாதம் சதயம்
4 கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் சதயம்
5 ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6 மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8 திருவாதிரை பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10 புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11 பூசம் ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி,
திருவாதிரை, புனர்பூசம்
12 ஆயில்யம் சித்திரை, அவிட்டம் 1, 2
13 மகம் சதயம்
14 பூரம் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15 உத்திரம் 1 ம் பாதம் சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16 உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17 அஸ்தம் பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம்,
கார்த்திகை 2, 3, 4
18 சித்திரை 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 2, 3, 4, மகம்
19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை 1, மகம்
20 சுவாதி பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21 விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22 விசாகம் 4 ம் பாதம் அவிட்டம், சதயம், சித்திரை
23 அனுஷம் கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம்,
அஸ்தம், சுவாதி
24 கேட்டை கார்த்திகை 2, 3, 4
25 மூலம் உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26 பூராடம் பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27 உத்திராடம் 1 ம் பாதம் உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28 உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29 திருவோணம் அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4,
சித்திரை, கேட்டை, பூராடம்
30 அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 1, மூலம்
31 அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32 சதயம் சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34 பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35 உத்திரட்டாதி ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம்,
திருவோணம், பூரட்டாதி
36 ரேவதி மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம்,
உத்திரட்டாதி

திருமண பொருத்தம் பார்க்கும் போது அடிப்படைவிதிகள்

இருவரும் ஒரு நட்சத்திரமக  இருக்ககூடாது. பகையோனி நட்சத்திரத்தாரை திருமணம் செய்யக்கூடாது.செய்தால், எலியும் பூனையுமாக இருப்பார்கள் . முதல் எதிரி நீதான் எனசபதம் போட்டுக்கொள்ளும்அளவு  குடும்ப  வாழ்க்கை இருக்கும். பெண்ணிற்கு 7வது நட்சத்திரத்தை சார்ந்த ஆனை திருமணம்செய்தால் தினம் சித்ரவதைதான், பெண் நட்சத்திரத்துக்கு 12, 17 வதுநட்சத்திரத்தில் பிறந்த ஆனைதிருமணம் செய்தால் துரதிர்ஷ்டம்,  தரித்திம்.பெண்ணிற்கு 22 வதுநட்சத்திரத்தில் பிறந்த ஆணை திருமணம் செய்யும்போது அவனுக்கு ஆயுள் குறைவு,  மாமியார்  ராசிக்கு,  மருமகள்ராசி 6,8 வது  ராசியா வந்துட்டாபேசாம,  மகனையும், மருமகளையும் தனிக்குடித்தனம்    வைத்து விடுவது  நல்லது. பலபஞ்சாயத்துகள், மண்டை உடைப்புகளை முன்கூட்டியே தடுக்கஇது வழிவகுக்கும்!!!